கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., இன்று இரவு 7 மணிக்கு தமிழக மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
கொரோனா வைரஸ் பலி உலகளவில் 19 ஆயிரத்தை தாண்டியது.
மேலும் 5 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவை சேர்ந்த 4 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் கொரோனா பரிசோதனை மையம்
மதுரையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமையும் இந்த மையம், தமிழகத்தில் அமையும் 8வது பரிசோதனை மையமாகும்.
பாகிஸ்தானில் 1000 பேர் பாதிப்பு
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 1000 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி ஆலோசனை
தமிழகத்தில் ஏற்கனவே மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படட நிலையில் பிரதமர் மோடி, நேற்று (மார்ச் 24) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலாகும் என அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலானது. இது குறித்து சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டில்லியில் இறந்தவருக்கு கொரோனா இல்லை
கொரோனா தொற்றால் டில்லியில் 2வதாக ஒருவர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மஹா.,வில் 112, குஜராத்தில் 38 ஆக உயர்வு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மஹாராஷ்டிராவில் 112 ஆகவும், குஜராத்தில் 38 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அறிகுறியுடன் 8 பேர் அனுமதி
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேர் கொரோனா அறிகுறியுடன் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரும் மாலைப்பட்டி பள்ளிவாசலில் 4 நாட்கள் தங்கி இருந்ததாகவும், மார்ச் 31ம் தேதி அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு திரும்ப செல்ல இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு 562 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. இதில், 519 இந்தியர்கள் எனவும்,43 வெளிநாட்டினர் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் ஒரே நாளில் 743 பேர் பலி
ரோம்: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடான இத்தாலியில், நேற்று(மார்ச் 24) ஒரே நாளில் 743 பேர் பலியானதையடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,820ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69,176 ஆக உள்ளது. புதிதாக 5,249 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா: தமிழகத்தில் முதல் பலி
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவிற்கு முதல் பலி பதிவானது.
கோவையில் 25 பேருக்கு கொரோனா அறிகுறி
கோவையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதை அடுத்து அவர்கள் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்று: தமிழகத்தில் 18 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 18 பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
17ஆயிரம் பேர் இறந்தனர்

இன்று (24 ம் தேதி ) இரவு 10 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 4 லட்சத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 750 பேர் மீண்டனர்.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை:தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு்ள்ளது. .நியூசிலாந்து மற்றும் லணடனில் இருந்து வந்துவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு மோடி உரை

கொரோனா குறித்து இன்று (24 ம் தேதி) இரவு 8 மணி யளிவில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு ஒன்றே முக்கிய வழி . இதனால் நாம் 21 நாட்கள் முழு ஊரடங்கை பின்பற்ற வேண்டிய நிலையில இருக்கிறோம். முடக்கம் ஒன்றே கொரோனாவை ஒழிக்க வழி இவ்வாறு மோடி கூறினார்.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 492 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 492 பேருக்கு உறுதியாகி உள்ளது
ரூ.2 ஆயிரம் நிவாரணம்: புதுச்சேரி முதல்வர்
கொரோனா பாதிப்பால் புதுச்சேரியில் ரேசன்கார்டுதாரர்களுக்கு ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
கூடுதல் வசதிகள் செய்யுங்கள் !
மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்
இன்று (24 ம் தேதி ) மாலை 3 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 83 ஆயிரத்து 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்து 586 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 536 பேர் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஸ்பெயின் தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் குணமடைந்து வீடு திரும்பும் முதல் நபர் ஆவார்.
ரஜினி நிதியுதவி
கொரோனாவால் படப்பிடிப்பு ஏதும் நடக்கவில்லை. இதனால், சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், பெப்சி அமைப்புக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
அலட்சியம் வேண்டாம்
கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். கொரோனா பரவாமல் தடுக்க அரசுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் இ.பி.எஸ்., கேட்டு கொண்டுள்ளார்.
511 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 10பேர் உயிரிழந்துள்ளனர்.24 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
டில்லியில் புதிதாக பாதிப்பில்லை
டில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை எனவும், 5 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
பயண கட்டுப்பாடுகள் தளர்வு
சீனாவின் ஹூபே நகரின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதை தொடர்ந்து, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது, கொரோனா குறைந்ததை தொடர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கைதட்டல்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களுக்கு, சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் கைதட்டி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வரும் 26 ல் நடக்க இருந்த ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிரதமர் உரை
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் மோடி , இன்று(மார்ச் 24) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் மீண்டும் உரையாற்ற உள்ளார்.
மணிப்பூர் பெண்ணுக்கு கொரோனா
பிரிட்டனில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
33 பேருக்கு கொரோனா
குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நிவாரண நிதி அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறத்தல் காரணமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அனைத்து ரேசன் கார்டு தாரர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்துள்ளார்
இந்தியாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 492 ஆனது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 இந்தியர்கள் மற்றும் 41 வெளிநாட்டினர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 37 பேர் குணமடைநதுள்ளனர்.
உலக அளவில் கொரோனா பலி 16,500ஐ தாண்டியது
உலக அளவில் கொரோனா பலி 16 ஆயிரத்து 500 ஐ தாண்டியது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 500 ஐ நெருங்கும் நிலையில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா தொற்று:தமிழகத்தில் 12 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 12 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா: இந்தியாவில் பலி 10 ஆக உயர்வு
கொரோனா வைரஸால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டோர் 12,519 பேர்: விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக, 12,519 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
மார்ச்-26 ம் தேதி நடைபெற இருந்த 11 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடிநடக்கும். டாஸ்மாக் கடைகள் நாளை(மார்ச்-24)முதல் மார்ச் 31 வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 433 ஆக உயர்வு
கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் 433 பேருக்கு உறுதியாகி உள்ளதாகவும் அதில் புதிதாக 37 பேருக்கு பரவியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும்
உயர்நீதிமன்ற உத்தரவுபடி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 30 நிமிடம் தாமதமாக தொடங்கும் என பள்ளிகல்விதுறை தெரிவித்துள்ளது. தேர்வு நேரம்: 10.30 டூ 1.45 மணி .
கொரோனா : கேரளா மாநிலம் முடக்கம்
கோரோனா வைரஸ் தொற்று பரவலால் கேரள மாநிலம் முடக்கப்பட்டுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோவையில் 387 பேர் கண்காணிப்பு
கோவையில் 387 பேர் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 40 பேர் வெளிநாடுகளில் இருந்து கோவை வந்தவர்கள் ஆவர்.
விமான சேவைகள் முடக்கம்

இந்தியாவில் நாடு முழுவதும் விமான நிலையங்கள் ( நாளை முதல் 24 ம் தேதி நள்ளிரவுக்கு பின்) மூடப்படுகிறது . இது போல் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்படுகிறது.
3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர்

இன்று (23 ம் தேதி ) மாலை 4 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 924 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லை மூடல்
ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து நாமக்கல் மாவட்டம் கொமரபாளையம் செல்லும் பாலத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்ட போலீசார் தடைவிதித்தது தடுப்பு அமைத்து உள்ளனர்.
2இல் 1 வது புகைப்படம்
தமிழகத்தில் 144 தடை உத்தரவு
தமிழகத்தில் நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அனைத்து மாவட்ட எல்லைகளையும் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமை
சென்னையில் 3 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. கொரோனா தொற்று, உள்ளே நுழையாதே என போஸ்டர் ஓட்டப்படும்.
ஈரோட்டில் கொரோனா மருத்துவமனை
ஈரோட்டில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெருந்துறை அரசு மருத்துவமனை கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படுகிறது. - கலெக்டர் கதிரவன்.
பஞ்சாபில் முழு ஊரடங்கு
பஞ்சாபில் முழு அளவில் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவு.
ராமநாதபுரத்தில் கடைகள் மூடல்
ராமநாதபுரத்திலும் அனைத்து கடைகளையும் அடைக்க கலெக்டர் உத்தரவு.
மீடியாக்களுடன் பிரதமர் ஆலோசனை

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி உயர் நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
கைதிகளுக்கு பரோல்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறைக்கைதிகளுக்கு பரோல் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு அமைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கலெக்டர்களுடன் ஆலோசனை
அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடல்
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களை வரும் 31 ம் தேதி வரை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கேரள ஐகோர்ட் ஏப்.8 வரை மூடல்
கேரள ஐகோர்ட்டுகளை வரும் ஏப்.8 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோரட்டில் அதிரடி மாற்றம்

சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். வக்கீல்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே ஆஜராக வேண்டும்.- பதிவாளர்.
31ம் தேதி வரை நகைக்கடைகள் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 30 ஆயிரம் நகைக்கடைகள் மார்ச் 31 வரை மூடப்படும் என நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜிலானி அறிவித்துள்ளார்.
ஈரோட்டில் ஊரடங்கை கடுமையாக்குங்கள்
காஞ்சிபுரம், ஈரோட்டில் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர்

இன்று (23 ம் தேதி )காலை 11 மணி நிலவரப்படி கொரோனாவால் உலக அளவில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலி பாதிப்பு 9 பேர்.
தமிழக அமைச்சர் எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவை சிலர் பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். இதுபோல் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 9,939 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 33,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 419 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா உயிரிழப்பு 14,613 ஆனது
உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை 14,613 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 3,36,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் கொரோனா பலி 5,000ஐ தாண்டியது
ரோம்: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,436 ஆனது. அங்கு 59.138 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,000 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இதனால் உயரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 396ஆக அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று:தமிழகத்தில் 10 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.
11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
தமிழகத்தில் திட்டமிட்டப்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர பஸ்கள் நாளை வழக்கம் போல் இயங்கும்
அனைத்து மாவட்டங்களிலும் நாளை வழக்கம் போல் மாநகர பஸ்கள் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கைதட்டி நன்றி தெரிவித்தவர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி
சுய ஊரடங்கை பின்பற்றி, மருத்துவர்களுக்கும் மற்றும் சேவை செய்தவர்களுக்கும் மாலை 5 மணிக்கு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தம்
மார்ச்-31 வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
முதல்வர் இபிஎஸ் கை தட்டல்

நாடு முழுவதும் கொரோனா ஒழிப்பில் சேவை செய்து வரும் டாக்டர்களுக்கு, சுகாதார பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழக முதல்வர் இபிஎஸ் அதிகாரிகளுடன் அவரது இல்லத்தில் நின்றபடி கைத்தட்ட பாராட்டினார்.
வெளிமாநிலங்களுக்கு பஸ்கள் இயக்க தடை
மார்ச்-31 வரை தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு அரசு, தனியார் பஸ்களை இயக்க தடை விதித்திருப்பதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு
கொரோனா பாதிப்பால், தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 மாவட்டங்களிலும் பஸ், ரயில் போன்ற போக்குவரத்து சேவைகள் மார்ச் 31 வரை ரத்து செய்யப்படுகின்றன.
விண்ணை முட்டிய கரகோஷம்

3இல் 1 வது புகைப்படம்
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் சேவையில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட பணியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் பிரைம் அபார்ட்மென்டில் கைதட்டிய பொதுமக்கள்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் சேவையில் உள்ள டாக்டர்கள் உள்ளிட்ட பணியார்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, திருப்பூர் பிரைம் அபார்ட்மென்டில் கைதட்டிய பொதுமக்கள்.

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி மருத்துவ சேவையை பாராட்டி கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

சேவையாளர்களுக்கு நன்றி கரகோஷம்
பிரதமர் மோடி கேட்டு கொண்டதன்பேரில் நாடு முழுவதும் மக்கள் வெளியே வந்து கைத்தட்டி கரோஷம் எழுப்பி சேவையாளர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
டில்லியில் 144 தடை உத்தரவு
டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிறமாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு
மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்ட், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டித்து மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாநில வாகனங்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
75 மாவட்டங்களில் கொரோனா !

இந்தியாவில் 75 மாவட்டங்களில் கொரோனா இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு .
மார்ச் 31 வரை பயணிகள் ரயில், மெட்ரோ ரயில் ரத்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 31 வரை பயணிகள் ரயில், புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரயில் மட்டும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவையும் மார்ச் 31 வரை ரத்து செய்வதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5இல் 1 வது புகைப்படம்
இன்று(மார்ச்–22 ம் தேதி ) நடந்த சுயஊரடங்கின் காட்சி.




இன்று(மார்ச்–22 ம் தேதி ) நடந்த சுயஊரடங்கின் காட்சி.

காலை 5 மணி வரை ஊரடங்கு
தமிழகத்தில் நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு; தமிழக அரசு உத்தரவு
கோவையில், இளம் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கோவை அரசு மருத்துவமனை டீன் உறுதி செய்துள்ளார்.
2இல் 1 வது புகைப்படம்
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் ஆள்நடமாட்டமின்றி காணப்படும் சாலை.

மக்கள் ஊரடங்கு காரணமாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மக்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது

இந்தியாவில் ஒரேநாளில் 2 பலி
இந்தியாவில் இன்று (மார்ச்22) ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் 63 வயது முதியவரும், பீகாரில் 38 வயதுடைய ஒருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தனர்.
இந்தியாவில் பாதிப்பு 341 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 324ல் இருந்து 341 ஆக உயர்ந்துள்ளது.
13 ஆயிரம் பேர் உயிரிழப்பு !

22 ம் தேதி காலை 11 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் 3 லட்சத்து 8 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13, 69 பேர் மரணமடைந்துள்ளனர்.
முக்கிய நகரங்கள் வெறிச் !

கொரோனாவை பரவ விடாமல் தடுக்கவும், மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தவும் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு இன்று (22 ம் தேதி ) நாடு முழுவதும் பெரும் அமைதி ஏற்பட்டது. டில்லி, மும்பை, சென்னை, கோல்கட்டா உள்ளிட்ட பெருநகரங்கள் வெறிச்சோடின.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குகிறது
இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகிறது. அந்நாட்டில் நேற்று மட்டும் 793 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ராணுவ உதவியை இத்தாலி நாடியுள்ளது.
கொரோனா: உலக அளவிலான பலி 13 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 13 ஆயிரத்தை தாண்டியது. உலக அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் மொத்தம் 332 பேர் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தொடுகிறது

இன்று ( 21 ம் தேதி) இரவு 10 மணி நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 38 ஆனது. பலி 12 ஆயிரத்தை தொடும் நிலையில் உள்ளது. 93 ஆயிரத்து 618 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனாவை தடுக்க தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி நிதி
கேரோனாவை தடுக்க, தமிழகத்திற்கு ரூ.987.85 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு மருந்து : டிரம்ப் தகவல்
அசித்ரோமைசின், ஹை ட்ராக்ஸி குளோரோகுயின் ஆகிய இரண்டு மருந்துகளை ஒன்றாக எடுத்து கொண்டால் கொரோனா நோயை கட்டுப்படுத்தலாம் என தெரிய வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
கல்லுாரி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
மார்ச்-31 வரை கல்லுாரி மற்றும் சி.பி.எஸ். இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் : மதுரையில் 51 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவது தடுக்கும் முன்னெச்சரிக்கையாக, மதுரை சிறையில் உள்ள 51 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை
ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் பா.ஜ.க ., தலைவருமான வசுந்தரா ராஜேவுக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைகடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து
நாளை(மார்ச்-22) சென்னை கடற்கரை -வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா
தாய்லாந்திலருந்து வந்த 2 பேருக்கும், நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆனது. - சுகாதார துறை அமைச்சர் , விஜயகுமார்.
ரஜினி பேட்டி !

நாளை ( 22 ம் தேதி ) ஊரடங்கு நடக்கவுள்ள நிலையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ரஜினி வேண்டுகோள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மோடி வேண்டுகோள் !

தேவையற்ற வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். மருத்துவர்களின் அறிவுரையை கடைபிடிக்க வேண்டிய நேரமிது; பிரதமர் மோடி.
கட்டண சலுகை ரத்து
கொரோனா உள்ள சூழ்நிலையில், முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கும் வகையில், கர்நாடகாவில் அரசு பஸ்களில் முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவீத கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜோர்டான் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியில் ஓட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளின் விவரங்களை சேகரிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் கியூபா வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநவமி அன்று யாரும் அயோத்தி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள சாதுக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து வழிபாடு நடத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.
ரயிலில் சென்றவர்களுக்கு கொரோனா
மார்ச் 13 ல் ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்ற 8 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
258 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 258 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிப்பு
ஹிமாச்சல பிரதேச மாநிலம் டேராடூரனில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்துள்ளது.
4 ஆயிரம் பேர் பலி
இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 627 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 4,986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தம் 47,021 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
5 ஆயிரத்தை தாண்டியது
நியூசிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது.
41 பேர் பாதிப்பு
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
78 பேர் பலி
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா
அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
பெண்டகனில் கொரோனா
அமெரிக்காவின் பெண்டகனில் 2 பேருக்கு கொரோனா என உறுதி செய்யப்பட்டுள்ளது.
2.75 லட்சம் பேருக்கு பாதிப்பு
கொரோனா வைரசுக்கு உலகளவில் 2,75,944 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 91,9121 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். 11,398 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகரிக்கும் எண்ணிக்கை
கொரோனா வைரஸ் தொற்றால் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,03,661 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 8,231 ஆகவும் அதிகரித்துள்ளன.
8 ஆயிரத்தை தாண்டிய பலி
உலகளவில், கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 1,99,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 82,802 பேர் குணமடைந்துள்ளனர்.
276 வெளிநாடு இந்தியர்களுக்கு கொரோனா
ஈரான், ஐக்கிய அரபு எமீரேட்ஸ், இத்தாலி, குவைத், ருவாண்டா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் 255 பேருக்கும், யுஏஇ.,யில் வசிக்கும் இந்தியர்கள் 12 பேருக்கும், இத்தாலியில் வசிக்கும் 5 பேருக்கும், குவைத். ருவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உ.பி, கர்நாடகாவில் தலா இருவருக்கு பாதிப்பு
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரங்களில் தலா இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 ஆனது.
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இத்தாலிக்கு சென்று வந்த குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இருப்பினும் அவர்கள் முன்னெச்சரிக்கையின்றி பத்தனம்திட்டா மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று வந்ததால் பலருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. எனவே கேரளாவின் எல்லை மாவட்டமான தென்காசி, புளியறை எல்லை வழியாக பாதிப்புள்ளோரை அனுமதிக்க கூடாது என தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் புளியரையில் நிறுத்தி கேரளாவிற்கே திருப்பியனுப்படுகின்றனர் அவசரம் கருதியும், காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் கேரளாவிற்கு அனுமதிக்கப்படுகின்றன.