கொரோனா பரவலால் என்.பி.ஆர்., ஒத்திவைப்பு

புதுடில்லி: கொரோனா பரவலால் என்.பி.ஆர்., தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.